/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண் சிகிச்சை பிரத்யேக பிரிவு இல்லாததால் சிரமம்
/
கண் சிகிச்சை பிரத்யேக பிரிவு இல்லாததால் சிரமம்
ADDED : ஜூன் 14, 2024 05:28 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கு பிரத்யேக பிரிவு இல்லாததால் நோயகளிகள் சிரமம் அடைகின்றனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் தினமும் 1500 பேர் வெளிநோயாளிகளாகவும், 200 க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசவ பிரிவில் பல்வேறு வசதிகள் உள்ளது.
மாதந்தோறும் 200 க்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.
சிசு பராமரிப்பு பிரிவு, விஷ முறிவு பிரிவு, எக்ஸ் ரே ஸ்கேன் , பிளட் பாங்க், என்.சி.டி. பிரிவு என பல பிரிவுகள் உள்ளது.
கண் சிகிச்சையளிக்க சிறப்பு டாக்டர்கள் இருவர் உள்ளனர்.ஆனால் கண் சிகிச்சைக்கான பிரத்யேக சிகிச்சை பிரிவு இல்லை.
இதனால் கண் சிகிச்சை டாக்டர்கள் பொது மருத்துவ பிரிவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கண் சிகிச்சையளிக்க பிரத்யேக பிரிவை ஏற்படுத்த இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.