/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துார்வாராத வரத்து வாய்க்கால் மழைநீர் செல்வதில் சிரமம்
/
துார்வாராத வரத்து வாய்க்கால் மழைநீர் செல்வதில் சிரமம்
துார்வாராத வரத்து வாய்க்கால் மழைநீர் செல்வதில் சிரமம்
துார்வாராத வரத்து வாய்க்கால் மழைநீர் செல்வதில் சிரமம்
ADDED : ஏப் 11, 2024 06:35 AM

போடி : போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் வரத்து வாய்க்கால் தூர்வாரப்படாமல் முட்புதர் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழை நீர் சீராக செல்ல முடியாத நிலை உள்ளது.
போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் வரத்து வாய்க்கால் அமைந்துள்ளது. மழை மற்றும் 18 ம் கால்வாய் திறந்து விடும் நிலையில் தண்ணீர் பெருக்கெடுத்து, சில்லமரத்துப்பட்டி முத்தாலம்மன் கோயில் வரத்து வாய்க்கால் வழியாக பெருமாள்கவுண்டன்பட்டி, அம்மாபட்டி,, மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும். இதன் மூலம் 500 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் பயன் அடையும். 50 அடி அகலம் உள்ள நீர்வரத்து ஓடையானது தூர்வாரப்படாமல் முட்புதர் ஆக்கிரமிப்பில் உள்ளது. தற்போது ஓடைக்கான தடமே தெரியாது நிலையில் உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை தேக்கம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் நிலங்களில் தண்ணீரை தேக்கி வைக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயராத நிலையில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
விவசாயிகள் பயன் பெறும் வகையில் முத்தாலம்மன் கோயில் வரத்து வாய்க்கால் இருபுறமும் முட்புதர்களை அகற்றி தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

