/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்பால் கண்மாயில் நீர் தேக்குவதில் சிரமம்
/
ஆக்கிரமிப்பால் கண்மாயில் நீர் தேக்குவதில் சிரமம்
ADDED : ஆக 15, 2024 03:49 AM
உத்தமபாளையம், : உத்தமபாளையம் தாமரைக்குளம் கண்மாயில் ஆகாயத்தாமரை, கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதால் முழுமையாக நீரை தேக்க முடியாத நிலை எழுந்துள்ளது. தாமரைக்குளம் கண்மாய் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் ராமசாமி நாயக்கன்பட்டி, கோகிலாபுரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பும் உள்ளது.
இந்த கண்மாயில் தெற்கு பகுதி முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்தும், வடக்கு பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால், கண்மாயில் முழு அளவில் தண்ணீர் தேக்க முடியவில்லை.
500 ஏக்கருக்கும் மேல் நிலங்களுக்கு பாசன வசதியளிக்கும் இந்த கண்மாயில் ஆகாயத் தாமரைகளை அகற்றி, முழு அளவில் தண்ணீர் தேக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.