/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'மோடி பிரதமராக தினகரன் வெற்றி பெற வேண்டும்' அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலாளர் பேச்சு

ADDED : மார் 22, 2024 05:42 AM
போடி: போடியில் பா.ஜ., அ.ம.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நகர செயலாளர் ஞானவேல் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் முத்துசாமி, காசிமாயன், நகர துணைச் செயலாளர் மணி, ஓ.பி.எஸ்., அணி மாவட்ட செயலாளர் சையதுகான், நகர செயலாளர் பழனிராஜ், பா.ஜ., மாவட்ட செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் சஞ்சீவி, கணேசன், த.ம.மு.க., மாவட்ட செயலாளர் தில் பிரசாத் முன்னிலை வகித்தனர்.
அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேல் பேசுகையில்,' இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் போர்க்களம். போர்க்களத்தில் தினகரன் எம்.பி., ஆகவும், மோடி பிரதமராகவும் வெற்றி பெற வேண்டும். வேற்றுமைகள் இருந்தாலும், ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக்காக பாடுபட வேண்டும். மற்றவர்களை குறை சொல்வதை விட வாக்குகள் அதிகம் பெறுவதை குறிக்கோளாக கொண்டு நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றார்.