/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5.25 கோடி கடனுதவி வழங்கல்
/
தேனி சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5.25 கோடி கடனுதவி வழங்கல்
தேனி சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5.25 கோடி கடனுதவி வழங்கல்
தேனி சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5.25 கோடி கடனுதவி வழங்கல்
ADDED : ஆக 15, 2024 04:03 AM
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5.25 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்காக பிரதமர் ஸ்வநிதி கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வியாபாரிகளுக்கு எவ்வித உத்தரவாதம் இன்றி, குறைந்த வட்டியில் ரூ.10 ஆயிரம் முதல் தவணை கடனாக வழங்கப்படுகிறது. கடன் தொகையை முழுமையாக செலுத்துபவர்களுக்கு 2வது தவணையில் ரூ.20 ஆயிரமும், 3வது தவணையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
தேனி நகராட்சியில் சாலையோர வியபாரிகளாக பதிவு செய்தவர்களில் 3814 பேர் கடனுதவி பெற விண்ணப்பித்தனர். இதில் 3168 பேருக்கு விண்ணப்பங்கள் ஏற்று இதுவரை 1875 வியாபாரிகளுக்கு ரூ.5.25 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், விண்ணப்பித்தவர்களின் வியாபார இடங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக கடன் தொகை வழங்குகின்றனர். சில வியாபாரிகள் கடன் தொகை திருப்பி செலுத்த வில்லை. அவர்கள் திருப்பி செலுத்தினால் ரூ.20 ஆயிரம் கடனுதவி கிடைக்கும். கடனை திருப்பி செலுத்த வங்கிகள், நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் கந்து வட்டி, நாள் வட்டியில் சிக்காமல் இருக்க உதவுகிறது. இந்த கடனுதவி திட்டத்தில் பயன்பெற சாலையோர வியாபாரிகள் உழவர் சந்தை எதிரே பூமாலை வணிக வளாகத்தில் செயல்படும் ஸ்வநிதி அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்றனர்.