/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவுக்கான பொருட்கள் வாகனங்களில் அனுப்பி வைப்பு
/
ஓட்டுப்பதிவுக்கான பொருட்கள் வாகனங்களில் அனுப்பி வைப்பு
ஓட்டுப்பதிவுக்கான பொருட்கள் வாகனங்களில் அனுப்பி வைப்பு
ஓட்டுப்பதிவுக்கான பொருட்கள் வாகனங்களில் அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 19, 2024 05:53 AM

ஆண்டிபட்டி: தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் உள்ள 316 ஓட்டு சாவடிகளுக்கு, ஓட்டுப் பதிவுக்கு தேவையான 40 வகை பொருட்கள் வாகனங்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொலைதூரத்தில் உள்ள மலை கிராம ஓட்டுச் சாவடிகளுக்கு தூரத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு தேவையான இயந்திரம் கட்டுப்பாட்டு கருவி, விவி பேட், பார்வையற்றோர் ஓட்டு போடுவதற்கான எழுத்துக்கள் அடங்கிய சீட்டு, எழுது பொருட்கள் உட்பட 40 வகை பொருட்கள் தனி தனி பண்டலாக கட்டப்பட்டு சரக்கு வாகனங்களில் பத்திரமாக அனுப்பப்பட்டது. ஒரு வாகனத்தில் மண்டல அலுவலர், கூடுதல் மண்டல அலுவலர், உதவியாளர், பாதுகாப்புக்காக எஸ்.எஸ்.ஐ., யுடன் இரு போலீசார் என மொத்தம் ஆறு பேர் வாகனங்களை பத்திரமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு கொண்டு சென்றனர்.