ADDED : ஆக 08, 2026 07:21 PM
தேனி, ஆக.9–
தேனி பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து வீரபாண்டி, அன்னஞ்சி விலக்கு, தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயங்குகின்றன.
இவை பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல், பிற பஸ்கள் வெளியேறும் பாதையில் விதி மீறி நிறுத்தப்படுகிறது. இதனால் மற்ற பஸ்கள் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் பயணிகளை ஏற்றுவதில் மினி பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. நேற்று மதியம் 1.30 மணிக்கு புது பஸ் ஸ்டாண்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் ரோட்டில் 2 மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன. அப்போது பயணிகளை ஏற்றுவதில் இரு பஸ் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். தேனி பஸ் ஸ்டாண்டில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதால் பயணிகள் அவதி அடைகின்றனர்.
