ADDED : ஆக 09, 2026 12:34 AM

அ நிறம் | அளவு
தேனி: உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேனி பங்களா மேட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட அலுவலர் ரேவதி முன்னிலை வகித்தார்.
தாய்பால் வழங்குவதன் அவசியம் உள்ளிட்டவற்றி வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பயிற்சி மாணவர்கள் பதாகை ஏந்தி சென்றனர்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்விசித்ரா உள்ளிட்டோர் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர்.
