/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொதுச்சுவர் வைப்பதில் தகராறு: 6 பேர் மீது வழக்கு
/
பொதுச்சுவர் வைப்பதில் தகராறு: 6 பேர் மீது வழக்கு
ADDED : மே 26, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே குமணன் தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் 48, இவருக்கும் இவரது வீட்டின் அருகே இருக்கும் மலைச்சாமி என்பவருக்கும் பொதுச் சுவர் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் பொதுச்சுவரை அடுத்து சுற்றுச்சுவர் கட்டும் பணியை மலைச்சாமி மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
ஜெகநாதன் புகாரில் மயிலாடும்பாறை போலீசார் மலைச்சாமி, பிரவீன்குமார், வசந்தி ஆகியோர் மீதும், வசந்தி புகாரில் ஜெகநாதன், பிரகாஷ், பாப்பா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.