/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் ஆர்.டி.ஓ.,விடம் தகராறு ஹி.எ.மு., தலைவர் மீது வழக்கு
/
பெரியகுளம் ஆர்.டி.ஓ.,விடம் தகராறு ஹி.எ.மு., தலைவர் மீது வழக்கு
பெரியகுளம் ஆர்.டி.ஓ.,விடம் தகராறு ஹி.எ.மு., தலைவர் மீது வழக்கு
பெரியகுளம் ஆர்.டி.ஓ.,விடம் தகராறு ஹி.எ.மு., தலைவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 04, 2024 02:40 AM
தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் ஆர்.டி.ஓ.,(வருவாய் கோட்டாட்சியர்) முத்து மாதவனை பணி செய்ய விடாமல் தடுத்து, மரியாதை குறைவாக பேசியதாக ஹிந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டத் தலைவர் ராமராஜ் மீது, தென்கரை போலீசார் வழக்குப்பதிந்தனர்.
தேனி மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ் 50. இவர் கடந்த ஜூன் 24 மதியம் பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது ஆர்.டி.ஓ., முத்துமாதவன் பொது மக்களிடம் குறை கேட்டுக் கொண்டிருந்தார். ஆர்.டி.ஓ., 'என்ன காரணத்திற்காக வந்துள்ளீர்கள்' என ராமராஜிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ராமராஜ், ஆர்.டி.ஓ.,விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து, மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார். ஆர்.டி.ஓ., பரிந்துரையில், அலுவலக முதுநிலை ஆர்.ஐ., மோகன் கணேசன் தென்கரை போலீசில் புகார் அளித்தார்.
ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மீது, அரசு அலுவலரை பணி செய்ய் விடாமல் தடுத்தல்,தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது உள்ளிட்ட இரு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.