/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடுவதால் இடையூறு
/
பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடுவதால் இடையூறு
ADDED : ஏப் 04, 2024 04:10 AM

தேனி, : தேனி புது பஸ் ஸ்டாண்டில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் 3 பிளாட்பாரங்கள் உள்ளன.
இதில் முதல் 2 பிளாட்பாரங்களுக்கு பஸ்கள் உள்ளே நுழைய மேற்கு புற நுழைவாயிலலை பயன்படுத்துகின்றன.
ஆனால் 3வதுபிளாட்பாரத்திற்கு பஸ்கள் உள்நுழையவும், வெளியேறுவதற்கும் வடக்கு புற நுழைவாயிலை மட்டும பயன்படுத்துகின்றன.
இந்த 3வது பிளாட்பாரத்தில் டவுன்பஸ்கள், கோவை, திருப்பூர்பஸ்கள் மட்டும் நிறுத்தப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் கோவை திருப்பூர் பஸ்கள் 2வது பிளாட்பாரத்திற்கு மாற்றப்பட்டன. பின் அரசியல் குறுக்கீடுகளால் 3 பிளாட்பாரத்திற்கு மீண்டும் மாற்றப்பட்டன.தற்போது 3 பிளாட்பாரத்திற்குள் உள்ளே செல்லும் பஸ்கள் பயணிகள் நடுரோட்டில் இறக்கி விடுவது தொடர்கிறது.இந்த ரோட்டின் வழியே மதுரை செல்லும்பஸ்கள், கலெக்டர் அலுவலகம், பெருந்திட்ட வளாகத்திற்கு அலுவல்பணிகளுக்காக செல்கின்றனர்.மதியம் அதிக வெயில் உள்ள போதும்பயணிகளை நடுரோட்டில்இறக்கி விடுவதால், பயணிகள் மட்டுமின்றி பின்தொடர்ந்து நிற்கும் வாகனங்கள்,டூவீலர்களில் வருவோரும் அவதிக்கு ஆளாகுகின்றனர். ரோட்டின் ஓரம் 'நோ பார்க்கிங் ' என பலகை வைக்கப்பட்டாலும் பலர் ரோட்டில் டூவீலர்கள், வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

