/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்து வாகனங்களால் பொது மக்களுக்கு இடையூறு
/
விபத்து வாகனங்களால் பொது மக்களுக்கு இடையூறு
ADDED : பிப் 28, 2025 06:40 AM

தேவதானப்பட்டி: m'தேவதானப்பட்டி ஊர் துவங்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் துாரத்திற்கு, விபத்து வாகனங்கள் அகற்றப்படாமல் ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அந்த வாகனங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.' என, ஊர் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வூரின் போலீஸ் ஸ்டேஷன் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் டூவீலர், கார், விபத்து வாகனங்கள், டூவீலரில் கஞ்சா கடத்தியது, மது போதையில் டூவீலர் ஓட்டி சென்றது உட்பட பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், தேவதானப்பட்டி நுழைவுப் பகுதியில் அருகே 200 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் உரசி செல்கின்றன. விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. தற்போது தேவதானப்பட்டியில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. நுழைந்தவுடன் விபத்து வாகனங்களை பொது மக்கள் இடையூறாக கருதுகின்றனர். இதுகுறித்து தேவதானப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் விபத்து வாகனங்களை போலீசார் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பெரியகுளம் டி.எஸ்.பி., தேனி எஸ்.பி., வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

