/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலங்கலான குடிநீர் சப்ளை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்
/
கலங்கலான குடிநீர் சப்ளை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்
கலங்கலான குடிநீர் சப்ளை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்
கலங்கலான குடிநீர் சப்ளை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்
ADDED : மே 24, 2024 03:05 AM
கம்பம்: ஊராட்சி பகுதிகளில் கலங்கலான குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டத்தில் 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்கள், குளங்கள், அணைகள் நிரம்பி வருகிறது. முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் அதிகளவில் செல்கிறது. ஊராட்சிகளில் முல்லைப் பெரியாற்றிலிருந்து கலங்கலான தண்ணீரை பம்ப் செய்து அப்படியே குடிநீராக சப்ளை செய்கின்றனர்.
குடிநீரை அப்படியே பயன்படுத்தினால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே குடிநீரை கண்டிப்பாக பொதுமக்கள் காய்ச்சி குடிக்க வேண்டும்.
குடிநீரை நன்றாக கொதித்து, பின் ஆறிய பின் பருக வேண்டும். எனவே குடிநீரை காய்ச்சும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல், சளி, வயிற்று போக்கு ஏற்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு வசதி இல்லை . எனவே பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.