ADDED : செப் 09, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, 0செப்.10-
ஆண்டிபட்டியில் வி.சி., மாவட்ட செயற்குழு கூட்டம் சக்கம்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் குழந்தைராஜ் தலைமை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க மாநில துணைச்செயலாளர் முத்துராமன் பங்கேற்றார். வி.சி., தலைவர் திருமாவளவனை வருஷநாடு கிராம மக்களுடன் சந்திப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும், கட்சி உள் கட்டமைப்புகளை உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டது. கடமலைக்குண்டு ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், சுருளி, ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் வர்கீஸ், கணேசன், மகளிர் அணி மாவட்ட செயலாளர். ஜீவா உட்பட பல கலந்து கொண்டனர். நகர் செயலாளர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.
