ADDED : ஜூலை 19, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 20–உலக செஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் செஸ் போட்டி நடந்தது.
செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வனச்சரகர் அமானுல்லா போட்டியை துவக்கி வைத்தார். போட்டிகள் மாணவிகள், மாணவர்கள் பிரிவில் நடந்தன. 8 வயது பிரிவில் நிதா ஸ்ரீ, கிரித்தீஸ், முதலிடம் வென்றனர். 10 வயதில் பிரிவில் வர்ணிக்கா, ரிஷிவரதன், 12 வயது பிரிவில் விபிஷா, சாய்சரவணா,15 வயது பிரிவில் சாத்விகா, ஹரி பிரசாத் முதலிடம் வென்றனர். தேசிய நடுவர் அஜ்மல்கான் போட்டிகளை நடத்தினார். வெற்றி பெற்றவர்களுக்கு அகாடமி பொருளாளர் கணேஷ் குமார் பரிசு வழங்கினார். அகடமி தலைவர் சையது மைதீன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
