ADDED : மே 13, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி தி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
அகாடமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா போட்டிகளை துவக்கி வைத்தார். 10 வயது பிரிவில் ஸ்ரீஆக்நேயா, விஜய் எடிசன், ஹர்சினி, 14 வயது பிரிவில் தாரணிக்காஸ்ரீ, முத்தமிழ் ஜெகன், சன்ஜெய்குமார், ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
இளம் சதுரங்க வீரருக்கான பரிசினை திருனேஷ், மகிழினிஸ்ரீ வென்றனர். போட்டி ஏற்பாடுகளை போட்டி இயக்குனர் அஜ்மல்கான் செய்திருந்தார்.