/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உணவுப்பொருள் விற்போர் லைசன்ஸ் பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தல்

ADDED : செப் 12, 2024 05:35 AM
தேனி: உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் லைசன்ஸ், பதிவு சான்றிதழ் பெற நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம். யாரேனும் கூடுதலாக கேட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை, உணவுப்பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் கூறுகையில், 'உணவு பொருள் தாயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் ஆண்டிற்கு ரூ. 12 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்பவர்கள் மட்டும் உணவுப்பாதுகாப்பு லைசன்ஸ் பெற வேண்டும். லைசன்ஸ் பெற கட்டணமாக ஆண்டிற்கு ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மற்ற சிறு, குறு உணவுப்பொருள் வியாபாரிகள், சிறு உணவகங்கள், ஓட்டல்கள் நடத்துபவர்கள் ரூ.12 லட்சத்திற்கு குறைவாக விற்பனை ஈடுபடுவோர் உணவுப்பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற ஆண்டிற்கு ரூ. 100 செலுத்த வேண்டும்.
அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக யாரேனும் கேட்டால் கொடுக்க வேண்டாம்.
அவ்வாறு கேட்டால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
உணவுப்பாதுகாப்புத்துறையின் 94440 42322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.உணவுப்பாதுகாப்புத்துறையினர் அபராதம் விதித்தால் அதனை https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan என்ற இணையதளம் மூலமோ கருவூலத்தில் சலான் பெற்று வங்கி மூலம் செலுத்தலாம் என்றார்.