/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாட்டிற்கு வராத சுகாதார நிலைய கட்டடம்
/
பயன்பாட்டிற்கு வராத சுகாதார நிலைய கட்டடம்
ADDED : மே 26, 2024 04:43 AM

சின்னமனூர்: சின்னமனூரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது-.
சின்னமனூரில் நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கென கருங்கட்டான்குளத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடம் 20 நாட்களுக்கு முன் சுகாதாரத் துறையினரிடம் நகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
இன்னமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே வைத்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினரிடம் கேட்டதற்கு, கட்டடத்தை 20 நாட்களுக்கு முன்பு தான் ஒப்படைத்தனர்.
ஆனால் நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான டாக்டர், நர்சு பணியிடங்கள் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை - எனவே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து பயன்பாட்டிற்கு அனுமதிப்பதில் சிக்கல் உள்ளது உண்மையே என்றனர்.