/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 22, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனி சமுதாயக்கூடத்தில் நடந்தது.
நகர் செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார்.
ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல்பாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்திரமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தே.மு.தி.க., தலைவராக இருந்த விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 27ல் ஆண்டிபட்டியில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், அன்றைய தினத்தை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து இயலாதவர்களுக்கு உதவி செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.