/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி தொகுதியில் அதிகம் செலவு செய்த தி.மு.க., வேட்பாளர்
/
தேனி தொகுதியில் அதிகம் செலவு செய்த தி.மு.க., வேட்பாளர்
தேனி தொகுதியில் அதிகம் செலவு செய்த தி.மு.க., வேட்பாளர்
தேனி தொகுதியில் அதிகம் செலவு செய்த தி.மு.க., வேட்பாளர்
ADDED : ஜூலை 31, 2024 05:35 AM
தேனி : தேனி லோக்சபாதொகுதியில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களில் அதிக பட்சமாக தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் ரூ.66.08 லட்சமும், சுயேட்சை வேட்பாளர் ஹரிகிருஷ்ணகுமார் குறைந்த பட்சமாக ரூ. 36,863 செலவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. தேனி தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 25 பேர் போட்டியிட்டனர். லோக்சபா தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம்ரூ. 95லட்சம் செலவு செய்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் ரூ. 66.08 லட்சம், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் ரூ. 52.77 லட்சம், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி ரூ. 50.43லட்சம், நாம்தமிழர் கட்சி மதன் ரூ.11.10லட்சம், பகுஜன் சமாஜ் கட்சி ஜீவா ரூ. 1.18 லட்சம், சுயேட்சை வேட்பாளர்கள் சேதுபதி ரூ.4.93லட்சம் முத்துகுமார் ரூ.4.65 லட்சம்,குமார் ரூ.4.57 லட்சம், வசந்த சரவணன் ரூ.4.55லட்சம், சதீஸ்குமார் ரூ.4.47 லட்சம், அஜித்குமார் ரூ.4.08 லட்சம், பரமசிவன் ரூ.3.30 லட்சம், சர்ச்சில் துரை ரூ.3.10லட்சம், ஆதிமுத்துக்குமார் ரூ. 1.39 லட்சம், பிரகாஷ் ரூ. 1.42லட்சம், விஜயன் ரூ. 1.12 லட்சம், பார்த்திபன் ரூ.1.09லட்சம், பிரேமா ரூ.1.01 லட்சம், செலவு செய்துள்ளனர். இது தவிர 7 வேட்பாளர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்துள்ளனர். இதில் குறைந்த பட்சமாக ஹரிகிருஷ்ணகுமார் ரூ.36,863 செலவுசெய்துள்ளார்.