/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஆக 03, 2024 05:15 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் 5 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ஆண்டிபட்டி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வரதராஜன், பி.டி.ஓ., சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர். ஒன்றியத்தில் 19 கவுன்சிலர்களில் அ.தி.மு.க.,11, தி.மு.க.,6, காங்., 1, அ.ம.மு.க., 1 உள்ளனர்.
கூட்டம் துவங்கியதும் தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜாராம், முருகேஸ்வரி,ஆசைமணி, ராமுத்தாய், ஜெயா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க.,வைச் சேர்ந்த 2வது வார்டு கவுன்சிலர் வைரமுத்து வெளி நடப்பு செய்யாமல் பங்கேற்றார். 2024 -2025ம் ஆண்டு 15 வது நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட, வரையறுக்கப்பட்ட நிதி ரூ.59 லட்சத்து 80 ஆயிரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 39 பணிகளுக்கும், வரையறுக்கப்படாத நிதி ரூ.39 லட்சத்து 85 ஆயிரத்தில் தேர்வு செய்யப்பட்ட 23 பணிகளுக்கும் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 23 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க., கவுன்சிலர் ராஜாராம் கூறியதாவது: ஜூலை 26ல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ,முத்துமாதவன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஆர்.டி.ஓ.,ஒருதலைபட்சமாக விசாரணையை முடித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.