/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., கொடி எரிப்பு போலீசார் விசாரணை
/
தி.மு.க., கொடி எரிப்பு போலீசார் விசாரணை
ADDED : ஆக 14, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்காபுரத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தி.மு.க., கொடியை எரித்து சேதப்படுத்தினர்.
ஆண்டிபட்டி -பெரியகுளம் ரோட்டில் ஸ்ரீரங்காபுரம் உள்ளது. இங்கு வைகை அணை ரோட்டில் தி.மு.க., கொடிக்கம்பம் இருந்தது. நேற்று முன் தினம் இரவில் யாரோ மர்ம நபர்கள் கொடி கம்பத்தில் இருந்த தி.மு.க., கொடியை இறக்கி கீழே போட்டு தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து தி.மு.க., கிளை செயலாளர் மனோகரன் புகாரில் வைகை அணை போலீசார் கொடியை எரித்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதேபோல் மர்மநபர்கள் தி.மு.க., கொடியை எரித்தனர்.