/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் சுய உதவி குழுக்களை தேர்தலில் களம் இறக்கும் தி.மு.க.
/
மகளிர் சுய உதவி குழுக்களை தேர்தலில் களம் இறக்கும் தி.மு.க.
மகளிர் சுய உதவி குழுக்களை தேர்தலில் களம் இறக்கும் தி.மு.க.
மகளிர் சுய உதவி குழுக்களை தேர்தலில் களம் இறக்கும் தி.மு.க.
ADDED : ஏப் 01, 2024 06:40 AM
கம்பம் : மகளிர் சுய உதவி குழுக்களை பிரசாரத்தில் களம் இறக்கும் நடவடிக்கையில் தி.மு.க. இறங்கியுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது.
தி.மு.க. அ.தி.மு.க. அ.ம.மு.க.,பா.ஜ. தலைவர்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வியூகங்களை வகுத்து வெற்றி பெற போராடி வருகிறது.
ஆளும் தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினரை ஈடுபடுத்த திட்டத்தை தயாரித்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளது.
சமீபத்தில் கூட மாநில அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் பெரும்பாலான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுயஉதவிக்குழுக்களை பிரசாரத்தில் பயன்படுத்தினால் வெற்றியை எளிதில் பெறலாம் என்ற வியூகத்தை உளவுத்துறை வகுத்து தந்துள்ளது.
அதன்பேரில் மகளிர் சுய உதவிக் குழுக்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் சத்தமில்லாமல் துவங்கியுள்ளது.

