/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை மொத்தமாக அள்ள தி.மு.க. முயற்சி
/
இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை மொத்தமாக அள்ள தி.மு.க. முயற்சி
இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை மொத்தமாக அள்ள தி.மு.க. முயற்சி
இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை மொத்தமாக அள்ள தி.மு.க. முயற்சி
ADDED : ஏப் 18, 2024 06:04 AM
கம்பம்: இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை முழுமையாக பெற தி.மு.க கடைசி நேர முயற்சிமேற்கொண்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் தி.மு.க., விற்கு அதிகம் கிடைக்கும். அ.தி.மு.க. பா.ஜ. வுடன் கூட்டணி வைத்ததால், அ.தி.மு.க. விற்கு கிடைத் ஓட்டுக்கள் சிதறியது. அ.ம.மு.க. தினகரனுக்கு கணிசமான ஆதரவு இஸ்லாமியர்களின் மத்தியில் இருந்து வந்தது.
ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ. கூட்டணியில் சேர்ந்ததால், அவரது ஆதரவாளர்களும் என்ன செய்வ தெரியாத நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் இஸ்லாமியர்களின் மொத்த ஓட்டுக்களையும் பெறும் முயற்சியில் தி.மு.க. இறங்கியுள்ளது.
சி.ஏ.ஏ. உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களை ஏற்கெனவே அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு நிறுத்திய இஸ்லாமிய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பை மாநில அரசு தந்தது. இது போன்ற விஷயங்களை எடுத்து கூறி ஓட்டுமொத்த இஸ்லாமியர்களின் ஒட்டுக்களை பெற நடவடிக்கைகளை துவக்கி உள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஜமாத் தலைவரிடமும் சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ. அல்லது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சென்று, இந்த விஷயங்களை இஸ்லாமிய மக்களிடம் கொண்டு சேர்க்ககேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்த இஸ்லாமிய ஓட்டுக்களையும் பெற முடிவு செய்துள்ளது.

