/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் தி.மு.க., டெபாசிட் இழக்கும்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம்

ADDED : மார் 29, 2024 05:56 AM
அலங்காநல்லுார் : 'ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்கும் தங்கத்தமிழ்ச்செல்வனால் தி.மு.க., தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். தேனியில் தி.மு.க., டெபாசிட் இழக்கும்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
தேனி தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லுார் ஒன்றிய பகுதிகளில் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரசாரத்தை துவக்கினார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: நாராயணசாமிக்கு ஓட்டு சேகரிக்க வாடிவாசலுக்கு வந்த நேரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் கூறிய நல்ல செய்தி வந்துள்ளது. நாராயணசாமி, ராசியான சாமியாகிவிட்டார். அ.தி.மு.க., இரட்டை இலையால் வாழ்வு, அடையாளம் பெற்றவர்கள் எல்லாம் இன்றைக்கு எதிர்த்து நிற்கிறார்கள்.
தங்க தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்பதால் தி.மு.க., தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். நிச்சயம் தி.மு.க., டெபாசிட் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. அமைச்சர் மூர்த்தி ராஜினாமா செய்வேன் என்று முன்கூட்டியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார் என்றார்.