/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி துவக்கம்
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி துவக்கம்
ADDED : ஜூலை 08, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: டி.என்.பி.எஸ்.சி.,யால் குரூப் 2, 2ஏ தேர்விற்கு ஜூலை 19க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்நிலை தேர்வு செப்.,14ல் நடக்கிறது. இத்தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (ஜூலை 8) துவங்குகிறது. பயிற்சியில் இலவச பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.