/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருஷநாட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க 2.36 ஏக்கர் நிலம் தானம்; ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் வழங்கியவருக்கு பாராட்டு

ADDED : ஏப் 11, 2024 06:39 AM
கடமலைக்குண்டு : வருஷநாட்டில் பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகம் அமைக்க ரூ.3 கோடி மதிப்பிலான 2.36 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியவருக்கு பாராட்டு குவிகிறது.
வருஷநாட்டில் கடந்த 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே சென்று திரும்ப முடியும். தற்போது தினமும் 30க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் வருஷநாடு சென்று திரும்புகிறது. இதனால் பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடி ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டை வேறு பகுதிக்கு மாற்ற இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு போதுமான இடம் இல்லை. புதிய அரசு அலுவலகங்களுக்கு கட்டுவதற்கும் இட வசதி இல்லை.
இந்நிலையில் சின்னமனுாரை சேர்ந்த பரமசிவம் தானாக முன்வந்து வருஷநாட்டில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 2.36 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி, அந்த இடத்தை கவர்னர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்கான ஆவணங்களை நேற்று வருஷநாடு ஊராட்சித் தலைவர் மணிமுத்துமிடம் வழங்கினார்.
பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தானமாக வழங்கிய பரமசிவத்தின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர். நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர் மலைராஜன், சமூக ஆர்வலர் குமார், வார்டு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், தங்கபாண்டி ஆகியோர் இருந்தனர்.