/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்றாம் பாலினத்தவரை ஏளனம் செய்யக்கூடாது: சார்பு நீதிபதி வேண்டுகோள்
/
மூன்றாம் பாலினத்தவரை ஏளனம் செய்யக்கூடாது: சார்பு நீதிபதி வேண்டுகோள்
மூன்றாம் பாலினத்தவரை ஏளனம் செய்யக்கூடாது: சார்பு நீதிபதி வேண்டுகோள்
மூன்றாம் பாலினத்தவரை ஏளனம் செய்யக்கூடாது: சார்பு நீதிபதி வேண்டுகோள்
ADDED : செப் 02, 2024 12:20 AM
கம்பம் : 'மூன்றாம் பாலினத்தவரை ஏளனம் செய்யக் கூடாது' என, கம்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் உத்தமபாளையம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா வேண்டுகோள் விடுத்தார்.
கம்பம் ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்வில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா தலைமை வகித்தார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜசேகர், மாஜிஸ்திரேட் ராமநாதன், விரைவு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் உள்ள சந்தேகங்களை மாணவிகள் கேட்க, அதற்கு நீதிபதிகள் பதிலளித்தனர். சட்டத்தின் பார்வையில் எது குற்றம், அதற்கான தண்டனை என்ன என்பது பற்றி விளக்கினர். இலவச சட்ட உதவிகள் பற்றியும் எடுத்து கூறினர்.
சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா பேசுகையில், 'மனித பிறவியில் ஆண், பெண், மூன்றாம் பாலினம் என உள்ளது. இவற்றில் ஆண், பெண் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் இணையானது தான் மூன்றாம் பாலினம். அவர்களை கேலி, கிண்டல் பண்ணக் கூடாது. அது தவறு. குறிப்பாக பொது இடங்களில் சிலர் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகின்றனர். பல மூன்றாம் பாலினத்தவர்கள் இன்றைக்கு உயர் கல்வி கற்று நல்ல பதவிகளில் உள்ளனர்.
எனவே அவர்களை கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு வர வேண்டும்.', என்றார். நிகழ்வில் அரசு வழக்கறிஞர் அழகு மாரீஸ்வரி , வழக்கறிஞர் சங்கச் செயலாளர் லலிதா, மூத்த வழக்கறிஞர் உமாபதி, கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.