/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சந்தேகம்: அரசு நில அபகரிப்பு வழக்கில் ஜாமின் வழங்க எதிர்ப்பு
/
சந்தேகம்: அரசு நில அபகரிப்பு வழக்கில் ஜாமின் வழங்க எதிர்ப்பு
சந்தேகம்: அரசு நில அபகரிப்பு வழக்கில் ஜாமின் வழங்க எதிர்ப்பு
சந்தேகம்: அரசு நில அபகரிப்பு வழக்கில் ஜாமின் வழங்க எதிர்ப்பு
ADDED : ஆக 30, 2024 10:18 PM
தேனி,:தேனியில் அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த தேவதானப்பட்டி நல்லகருப்பன்பட்டி ரியல் எஸ்டேட் உரிமையாளர் தங்கபாண்டியனுக்கு 39, ஜாமின் வழங்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர்.
தேனியில் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அரசு அதிகாரிகள் துணையுடன், அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்டன. இதனை பெரியகுளம் சப் கலெக்டராக இருந்த ரிஷப் விசாரணையில் கண்டறிந்தார். பின் ஆர்.டி.ஓ., தாசில்தார்கள், சர்வேயர், வி.ஏ.ஓ., அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் என 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர் விசாரணையில் மேலும் பலர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமின் பெற்று வெளியில் வந்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த தங்கபாண்டியன் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆக.27 ல் சரணடைந்தார். அவர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். தங்கபாண்டியன் தரப்பில் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விசாரிக்க அனுமதி கேட்டும் சி.பி.சி.ஐ.டி., மதுரை டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை செப்., 2ல் நடக்க உள்ளது.