/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரதட்சணை கொடுமை: கணவர் மாமனார் உட்பட நால்வர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை: கணவர் மாமனார் உட்பட நால்வர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமை: கணவர் மாமனார் உட்பட நால்வர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமை: கணவர் மாமனார் உட்பட நால்வர் மீது வழக்கு
ADDED : ஆக 09, 2024 12:42 AM
தேனி: மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், மாமனார், மாமியார் உட்பட நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தேனி என்.ஆர்.டி., நகர் காந்திஜி மெயின் ரோடு ராஜேந்திரன் - குமுதவள்ளி தம்பதியினர் மகள் சரிகா 27.இவருக்கும் சென்னை மாடபாக்கம் தம்பையா ரெட்டி காலனியை சேர்ந்த தினேஷ்குமாருக்கும் 36, 2016 டிசம்பரில் தேனியில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் 100 பவுன் தங்கநகை, ரூ.பல லட்சம் மதிப்புள்ள பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் சீதனமாக வழங்கினர்.
திருமணத்திற்கு பின் மாமனார் ரத்தினம் 68, மாமியார் இந்திரா 60, கணவரின் உறவினர்கள் அகிலா 40 ஆகியோருடன் கணவரும் இணைந்து மனைவியை துன்புறுத்தினர். கணவர் கார் வாங்கிவர வலியுறுத்தியதால் ரூ.11 லட்சத்திற்கு கார் வாங்கி கொடுத்தனர். பின் ராஜேந்திரன் சொத்தை எழுதி வாங்கி வர கூறி மிரட்டினர்.
இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உளளது. இரு நாட்களுக்கு முன் சரிகா, அவரது குழந்தையை வீட்டின் முன் இறக்கிவிட்டு கணவர் தினேஷ்குமார் சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட சரிகா புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கணவர், மாமனார், மாமியார் உட்பட 4 பேர் மீது வரதட்சணை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.