/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவையான அளவு குடிநீர் பருகுவதால் சிறுநீரக கல் பிரச்னையை தவிர்க்கலாம் தேனி மருத்துவக்கல்லுாரி டாக்டர் ஆலோசனை

ADDED : மே 03, 2024 06:10 AM
தேனி: பொதுமக்கள் தேவையான அளவு குடிநீர் பருகுவதால் சிறுநீரக கல், முளையில் ரத்தகுழாய் அடைப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என தேனி மருத்துவக்கல்லுாரி டாக்டர் திருநாவுக்கரசு ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மாவட்டத்தில் நாள்தோறும் வெயின் தாக்கம் அதிகரித்து கொண்டு உள்ளது. பொதுமக்கள் மதிய வேளையில் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க அரசு வலியுறுத்தி உள்ளது.
அதிக அளவு நீர் எடுத்துக்கொள்ளவும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வெளியில் செல்லும் போது குடை கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மருத்துவக்கல்லுாரி பொது மருத்துவத்துறை துறைத்தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, காற்றோட்டமான காட்டன் ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.
காலணிகள், ஷூக்கள் இறுக்காமகவும், அதிக நேரம் அணிவதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் நீர் ஆகாரங்களாக மோர், கூல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
சுகாதாரமற்ற நீர் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மோரால் காலரா உள்ளிட்ட நீர் மூலம் பரவக்கூடிய நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
இதனால் முடிந்தளவு கடைகளில் மோர் அருந்துவதை தவிர்த்து வீட்டில் தயாரித்த மோர் பருகலாம்.
அதில் சிறிய வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளலாம்.கோடைகாலத்தில் தொடர்ந்து நீர் பருகுதல், தேவையான அளவு நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக கல் பிரச்னை, முளையில் ரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளை தவிர்க்கலாம் என்றார்.