/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீணாகும் நீருக்கும் கட்டணம் வசூலிக்கும் குடிநீர் வாரியம்: கூடுதல் சுமை என ஊராட்சிகள் புலம்பல்
/
வீணாகும் நீருக்கும் கட்டணம் வசூலிக்கும் குடிநீர் வாரியம்: கூடுதல் சுமை என ஊராட்சிகள் புலம்பல்
வீணாகும் நீருக்கும் கட்டணம் வசூலிக்கும் குடிநீர் வாரியம்: கூடுதல் சுமை என ஊராட்சிகள் புலம்பல்
வீணாகும் நீருக்கும் கட்டணம் வசூலிக்கும் குடிநீர் வாரியம்: கூடுதல் சுமை என ஊராட்சிகள் புலம்பல்
ADDED : மே 04, 2024 05:54 AM
தேனி: குடிநீரில் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீருக்கும் சேர்த்து வாரியம் கட்டணம் வசூலிப்பதால் ஊராட்சிகளில் கூடுதல் செலவு ஏற்படுவதாக ஊராட்சி நிர்வாகங்கள் புலம்புகின்றன.
குடிநீர் வடிகால் வாரியத்தால் தாடிச்சேரி, கோவிந்தநகரம், சத்திரபட்டி கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களுக்கு வைகை, முல்லைபெரியாறில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. போர்வெல்கள் அமைக்கப்பட்டு நீரேற்று நிலையங்கள் மூலம் ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் செல்லும் குழாய்கள் சில இடங்களில் உடைந்து குடிநீர் வீணாவதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் வீணாகும் குடிநீருக்கும் சேர்த்து கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதாக ஊராட்சி நிர்வாகங்கள் கூறுகின்றன.
ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில், ஒரு கூட்டு குடிநீர் திட்டத்தில் பல ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆற்றில் இருந்து குடிநீர் அனுப்பப்படும் அளவு மட்டும் மீட்டர் ரீடிங்கில் குறிப்பிடப்படுகிறது. ஆயிரம் லிட்டர் குடிநீர் ஒரு யூனிட் ரூ.13.50 வீதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் குடிநீர் வரும் வழியில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இந்த குழாய் உடைப்பை சீரமைக்காமல் வாரியம் மீட்டரில் குறிப்பிடப்படும் அளவில் கட்டணம் வசூலிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் சம்மந்தபப்ட்ட ஊராட்சி பெறாமலே கட்டணம் செலுத்து நிலை ஏற்படுகிறது.
எனவே. வடிகால் வாரியம் சார்பில் ஊராட்சிக்கு எவ்வளவு குடிநீர் வழங்கப்படும் அளவை மீட்டர் பொருத்தி அளவிட வேண்டும். வழங்கப்படும் அளவிற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். இதற்கு நிரந்த தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.