UPDATED : ஆக 18, 2026 05:00 PM
ADDED : ஆக 18, 2026 04:51 PM
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியம், டி.சுப்புலாபுரத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த ஊராட்சியில் டி.சுப்புலாபுரம், அணைக்கரைப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது. கூடுதல் தேவைக்கு போர்வெல்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்தின் குறைவான ஒதுக்கீடு நிலத்தடி நீர்மட்டம் குறைவால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பக்கத்து ஊர்கள், தோட்ட கிணறுகளில் இருந்தும் தண்ணீர் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அன்றாடம் தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஆண்டிபட்டி சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக இத் திட்டத்தில் தினமும் 2.16 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. ஊராட்சியில் 29 போர்வெல்களில் தற்போது மூன்று மட்டுமே செயல்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் பல போர்கள் செயல் இழந்து விட்டன. ஆண்டிபட்டி - சேடப்பட்டி சேடபட்டி குடிநீர் திட்டத்தில் வினியோகிக்கப்படும் நீரின் அளவை உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
