/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பி மறுகால் பாய்கிறது 5 ஆண்டுகளுக்கு பின் கோடையில் நிரம்பியது

ADDED : மே 22, 2024 07:49 AM

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் பெய்த தொடர் கோடை மழையால் சோத்துப்பாறை அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் நிரம்பி மறுகால் பாய்கிறது.
பெரியகுளத்திருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை அணை பகுதியில் பெய்யும் கோடை மழையால் அணைக்கு நீர் வருகிறது. அணையின் மொத்த உயரம் 126. 28 அடி 100 மில்லியன் கன அடி.
மே 10 ல் அணை நீர்மட்டம் 100.69 அடியாக இருந்தது.
தொடர் கோடை மழையால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது. மே 18 ல் 115.12 அடியாகவும், மே 19ல் 122.67 அடியாகவும், நேற்று முன்தினம் மே 20 காலை 124.80 அடியாக உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு 11:15 மணிக்கு 126.28 அடியும் உயர்ந்து மறுகால் பாய்ந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த அணை நீரினால் பழைய ஆயக்கட்டில் 1825 ஏக்கர், புதிய ஆயக்கட்டில் 1040 ஏக்கர் என மொத்தம் 2865 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணையைச் சுற்றி 10 கி.மீ., தொலைவில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான கிணறுகளில் வெயிலின் தாக்கத்தால் நீர் குறைந்திருந்த நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
அணையில் இருந்து மறுகால் செல்லும் தண்ணீர் வராக நதியில் செல்வதால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என பொதுப்பணித்துறை மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.