/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசார் பற்றாக்குறையால் புறக்காவல் நிலையத்திற்கு பூட்டு
/
போலீசார் பற்றாக்குறையால் புறக்காவல் நிலையத்திற்கு பூட்டு
போலீசார் பற்றாக்குறையால் புறக்காவல் நிலையத்திற்கு பூட்டு
போலீசார் பற்றாக்குறையால் புறக்காவல் நிலையத்திற்கு பூட்டு
ADDED : ஏப் 11, 2024 06:31 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சப் டிவிஷனில் ஆண்டிபட்டி, ராஜதானி, க.விலக்கு வைகை அணை, கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, ஆண்டிபட்டி அனைத்து மகளிர் ஆகிய ஸ்டேஷன்களும், ஏத்தக்கோயில், கன்னியப்பபிள்ளைபட்டி ஆகிய இரு புறக்காவல் நிலையங்கள் உள்ளன.
டி.எஸ்.பி., 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட போலீசார் சப் டிவிஷனில் உள்ளனர்.
போலீசார்கள் பெரும்பாலும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களில் மிக குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் அன்றாட பணிகளை கவனித்து வருகின்றனர்.
ஏத்தக்கோயில், கன்னியப்பபிள்ளைபட்டி அவுட் போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள போலீசார் அனைவரும் தேர்தல் பணி உட்பட மாற்றுப் பணிகளுக்கு சென்றுள்ளனர்.
ஏத்தக்கோயில் புறக்காவல் நிலையம் போலீசார் இல்லாததால் பூட்டி சென்று விட்டனர்.