/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவுண்டன்குளத்தில் ஆக்கிரமிப்பால் நீரை தேக்க முடியாமல் சிரமம் ராசிங்காபுரத்தில் தடுப்பணையை சேதப்படுத்தும் அதிகாரிகள்
/
கவுண்டன்குளத்தில் ஆக்கிரமிப்பால் நீரை தேக்க முடியாமல் சிரமம் ராசிங்காபுரத்தில் தடுப்பணையை சேதப்படுத்தும் அதிகாரிகள்
கவுண்டன்குளத்தில் ஆக்கிரமிப்பால் நீரை தேக்க முடியாமல் சிரமம் ராசிங்காபுரத்தில் தடுப்பணையை சேதப்படுத்தும் அதிகாரிகள்
கவுண்டன்குளத்தில் ஆக்கிரமிப்பால் நீரை தேக்க முடியாமல் சிரமம் ராசிங்காபுரத்தில் தடுப்பணையை சேதப்படுத்தும் அதிகாரிகள்
ADDED : செப் 12, 2024 05:37 AM

போடி: ராசிங்காபுரம் கவுண்டன்குளம் ஆக்கிரமிப்பால் மழை நீரை முழுவதும் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஷட்டர் அமைக்காததால் நீரை வெளியேற்ற தடுப்பணையை அதிகாரிகள் சேதப்படுத்தும் அவலம் தொடர்கிறது.
போடி ஒன்றியம், ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டன் குளம் 25 ஏக்கரிலானது. ராசிங்கபுரம் சுற்றுப் பகுதியிலும், தேவாரம் சுத்தி வாங்கி ஓடையில் இருந்து வரும் மழைநீர் கண்மாயில் தேங்குகிறது. இக் கண்மாய் நீரை நம்பி ராசிங்காபுரம், நாகலாபுரம், மல்லிங்காபுரம், கெஞ்சம்பட்டி, கரியப்பன் கவுண்டன்பட்டி, ஜக்கம்மாள்புரம் பகுதி விளை நிலங்கள் பயன் பெறுகின்றன.
குளத்தின் ஒரு பகுதியை அதிகாரிகள் தனி நபர்களுக்கு தாரை வார்த்ததால் தற்போது 15 ஏக்கராக சுருங்கி விட்டது. ஆக்கிரமிப்பால் கண்மாயில் மழை காலங்களில் நீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குளத்தை மீண்டும் முறையாக சர்வே செய்து காணாமல் போன கண்மாயை மீட்டு மழை நீரை முழுமையாக தேக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:
தனியாருக்கு தாரை வார்த்த அதிகாரிகள்
ராஜவேல், விவசாயி, ராசிங்காபுரம்: கவுண்டன் குளத்தில் தண்ணீர் தேங்குவதன் மூலம் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் பெறுவதுடன் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள். குளத்தில் முழுவதும் நீர் தேங்கி 16 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு களஞ்சியம் விவசாயிகள் சங்கம் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்களிப்பில் கண்மாயை தூர்வார முயற்சி மேற்கொண்டனர்.
அப்போதும் முறையாக தூர்வாராததால் பயன் அளிக்கவில்லை. அதிகாரிகளின் ஆதரவோடு கண்மாய் மரங்கள் வெட்டி குறிப்பிட்ட பகுதியை தனியாருக்கு தாரை வார்த்து உள்ளனர். விவசாயிகளை இதனை சரி செய்தாலும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். தடுப்பணையை உயர்த்தி கண்மாயை தூர்வார மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கண்மாய் பாதையில் ரோடு வசதி இன்றி முட்செடிகள் வளர்ந்து டூவீலரில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. முறையாக சர்வே செய்து கண்மாய் தூர்வாரி, மழை நீரை தேக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஷட்டர் இல்லாததால் தடுப்பணை சேதம்
ரவி, விவசாயி, ராசிங்காபுரம் : 18 ம் கால்வாய் நீர் கடந்த 2 ஆண்டுகளாக கண்மாய்க்கு திறந்து விடவில்லை. கண்மாய் கரை உயர்த்தாததால் முட்செடிகள் அதிகம் வளர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. கண்மாயை தனி நபர்கள் ஆக்கிரமித்து காற்றாலை அமைத்து உள்ளனர்.
கண்மாய்க்கு வரும் நீரை தேக்க ஷட்டர் அமைக்காமல் அருகே உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக தடுப்பணைகளை நீர்வளத்துறையினர் அடிக்கடி சேதப்படுத்துகின்றனர். இதனால் கண்மாயில் தேக்கிய மழை நீர் வெளியேறி விடுவதால் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். முட்செடிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆழப் படுத்துவதோடு கண்மாய் கரையை உயர்த்தி ஷட்டர் அமைத்து மழைநீர் கண்மாயில் தேங்க செய்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.