/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடை மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
/
கோடை மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கோடை மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கோடை மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ADDED : மே 11, 2024 05:29 AM

பெரியகுளம்: கோடைமழையால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்காணல், வெள்ளகெவி பகுதிகளில் பெய்யும் மழை, கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும் அருவிக்கு தண்ணீர் வருகிறது. மே 1 முதல் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. மே 9 ல் பிற்பகல் வரை
மின்மோட்டார் பம்புசெட்டில் வரும் தண்ணீர் போல் குறைந்த அளவு தண்ணீர் வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று 'காக்கா குளியல்' என கூறும் வகையில் குளித்து சென்றனர். இதனால் தேவதானப்பட்டி வனச்சரகம் நிர்வாகம் தண்ணீர் அளவு குறைவு காரணமாக, சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை தவிர்க்க அருவி நுழைவுப்பகுதி கேட் மூட திட்டமிட்டனர்.
தலைகீழாக மாறிய காலநிலை: நேற்று முன்தினம் (மே 9) மாலை 5:00 மணிக்கு அருவியில் சாரல் மழை பெய்தது. மாலை 6:00 மணிக்கு கனமழைய இரவு முழுவதும் கொட்டியது. இதனால் அருவிக்கு காட்டாற்று வெள்ளம் போல் கொட்டியது. இதனையறிந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குஷியாக குளித்து மகிழ்ந்தனர். பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
பாதுகாப்பு வேண்டும்: வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் இன்று சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். இரு தினங்களுக் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.