sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இடுக்கி மாவட்டத்திற்கு இ சேவா கேந்திரா வாகனம் கேரள ஐகோர்ட் அனுமதி

/

இடுக்கி மாவட்டத்திற்கு இ சேவா கேந்திரா வாகனம் கேரள ஐகோர்ட் அனுமதி

இடுக்கி மாவட்டத்திற்கு இ சேவா கேந்திரா வாகனம் கேரள ஐகோர்ட் அனுமதி

இடுக்கி மாவட்டத்திற்கு இ சேவா கேந்திரா வாகனம் கேரள ஐகோர்ட் அனுமதி


ADDED : மே 28, 2024 03:29 AM

Google News

ADDED : மே 28, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : இடுக்கி மாவட்டத்திற்கு மொபைல் இ சேவா கேந்திரா வாகனத்தை கேரள ஐகோர்ட் அறிமுகம் செய்துள்ளது.

நீதிமன்ற வழக்குகளை இ பைலிங் முறையில் தாக்கல் செய்வது, வழக்கு விபரங்களை எளிதாக தெரிந்து கொள்வது, வாய்தா விபரங்களை தெரிந்து கொள்வது, தீர்ப்பு நகல்களை பெறுவது, கோர்ட் விடுமுறையை தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக நீதிமன்றங்களுக்கு செல்லாமல், இ சேவா கேந்திரங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அனைத்து மாநில ஐகோர்ட்டுகள், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்ட கோர்ட்டில் சோதனை ஒட்ட முறையில் இ சேவா கேந்திரங்களை துவக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் சொகுசு பஸ்சில் மொபைல் இ சேவா கேந்திராவை அம்மாநில ஐகோர்ட் துவக்கி உள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் இரண்டாவது இடமாக இடுக்கி மாவட்டம் உள்ளது. எனவே தொடுபுழா மாவட்ட கோர்ட்டின் கட்டுப்பாட்டில் இ சேவா கேந்திரா வாகனம் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் மலைப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களின் கோர்ட் தொடர்பான விஷயங்களை இனி எளிதில் பெற முடியும்.

மாவட்டம் முழுவதும் இந்த மொபைல் இ சேவா கேந்திரா சுற்றி வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது-






      Dinamalar
      Follow us