ADDED : ஜூன் 16, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேவதானப்பட்டி அருகே கதிரப்பன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவராமன் 28. தனியார் பஸ் டிரைவர்.
நேற்று முன்தினம் இரவு 8:40மணிக்கு வத்தலகுண்டில் இருந்து பெரியகுளம் நோக்கி பஸ் வரும்போது, பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனி பிரிவு அருகே அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது பஸ் மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.கீழவடகரை வி.ஏ.ஓ., ராஜ்குமார் புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.