/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணம், பொருட்கள் பிடித்தால் உடனே தகவல் தரவும் தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவு
/
பணம், பொருட்கள் பிடித்தால் உடனே தகவல் தரவும் தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவு
பணம், பொருட்கள் பிடித்தால் உடனே தகவல் தரவும் தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவு
பணம், பொருட்கள் பிடித்தால் உடனே தகவல் தரவும் தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவு
ADDED : மார் 22, 2024 05:34 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் செலவீன பார்வையாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி லோக்சபா தொகுதி தேர்தல் செலவீன பார்வையாளர்களாக தர்ம்வீர் தண்டி, விஜிந்திரகுமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமையில் 6 சட்டசபை தொகுதியில் செயல்படும் பறக்கும்படை, நிலைக்குழு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் அபிதாஹனீப், கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷீலா, ஆர்.டி.ஓ.,க்கள் முத்துமாதவன்(பெரியகுளம்), தாட்சாயினி(உத்தமபாளையம்), கலால்உதவி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், குழுக்களில் உள்ள அனைவரும் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். சோதனையில் பிடிபடும் கணக்கில் வராத பணம், பொருட்களை உடனடியாக உதவி தேர்தல்நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல்பணிக்காக வழங்கப்பட்டுள்ள இ.எஸ்.எம்.எஸ்., செயலில் அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிடிபட்ட பொருட்களை அருகில் உள்ள சார்நிலை கருவூலங்களில் விரைவில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்கள் செலவு தொடர்பான கணக்குகளை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். வேட்பாளர்கள் தவறாக செலவீன கணக்குகள் வழங்கினாலும், நீங்கள் தரும் பதிவுகள் முக்கியமானதாக இருக்கும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

