/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் எதிரொலி: விவசாய தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு
/
தேர்தல் எதிரொலி: விவசாய தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு
தேர்தல் எதிரொலி: விவசாய தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு
தேர்தல் எதிரொலி: விவசாய தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு
ADDED : ஏப் 04, 2024 11:48 PM
போடி : லோக்சபா தேர்தல் பிரசாரம் காரணமாக விவசாய பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இலவம், நெல் அறுவடை சீசன், சோளம் உள்ளிட்ட விதைப்பு பணியும் துவங்கி உள்ளது. மாங்காய், ஏலத் தோட்டத்திற்கு தண்ணீர், மருந்து அடிப்பதற்கு குறைந்த பட்சம் தினசரி கூலியாக ரூ.300 முதல் 400 வரை சம்பளம் கிடைக்கிறது. தோட்டத்தில் காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வேலை செய்ய வேண்டும்.
ஆனால் தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டும் உடன் சென்றாலே கட்சி மூலம் ரூ.200 முதல் ரூ.300 வரை கிடைக்கிறது.
அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மூலம் குறைந்தது ரூ.100 முதல் ரூ.300 வரை வழங்கப்படுகின்றன. இதனால் தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கின்றனர். இதற்காக காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் அந்தந்த தெருக்களில் சென்று ஓட்டு கேட்க சென்றாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிரசார ஊர்வலத்தில் பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களே அதிகம் செல்வதால், விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.
விளைந்த இலவம்காய் மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களை அறுவடை செய்யவும், தோட்டங்களுக்கு தண்ணீர், மருந்து அடிக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

