/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் களப்பணியாளர்கள் உயிர்காக்கும் ‛'ஓல்டேஜ் டிடெக்டர்' கருவி அறிமுகம் மேற்பார்வை பொறியாளர் விளக்கம்
/
மின் களப்பணியாளர்கள் உயிர்காக்கும் ‛'ஓல்டேஜ் டிடெக்டர்' கருவி அறிமுகம் மேற்பார்வை பொறியாளர் விளக்கம்
மின் களப்பணியாளர்கள் உயிர்காக்கும் ‛'ஓல்டேஜ் டிடெக்டர்' கருவி அறிமுகம் மேற்பார்வை பொறியாளர் விளக்கம்
மின் களப்பணியாளர்கள் உயிர்காக்கும் ‛'ஓல்டேஜ் டிடெக்டர்' கருவி அறிமுகம் மேற்பார்வை பொறியாளர் விளக்கம்
ADDED : மே 29, 2024 05:21 AM

தேனி : மின்வாரிய களப்பணியாளர்கள் உயிர் காக்கும் 'ஓல்டேஜ் டிடெக்டர்' கருவி செயல்விளக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டன.
மாவட்ட மின்வாரியத்தில் 1100 களப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர். களப்பணியாளர்களுக்கு வாரியம் கிளவுஸ், எர்த் ராட், மழை்கோட் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கியுள்ளது. இருப்பினும் சில மின் விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் களப்பணியாளர்களுக்கு மின்லைனில் மின்சாரம் செல்வதை எளிதாக அறிந்துகொள்ள 'ஓல்டேஜ் டிடெக்டர்' கருவி அறிமுகம் செய்துள்ளது. தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் கருவி பயன்பாடு பற்றி விளக்கினார்.
வயர்மேன் ராமர், 'ஓல்டேஜ் டிடெக்டர்' கருவியை கைகளில் கட்டிக் கொண்டு மின்கம்பத்தில் ஏறி, பயன்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
மேற்பார்வை பொறியாளர் கூறுகையில், விபத்துக்களை தவிர்க்க இக்கருவியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பணியாளர்கள் மின்கம்பத்தில் ஏறி தாழ்வழுத்த மின் வயருக்கு அருகில் செல்லும் போது 2 அடி இடைவெளியிலும், உயரழுத்த மின்பாதையில் 8 அடி இடைவெளியில் மின்சாரம் மின்தடை ஏற்படாமல் இருந்தால் இக்கருவி 'பீப்' ஒலி எழுப்பி எச்சரிக்கை அலாரம் அடிக்கும். இதனால் மின் களப்பணியாளர்கள் எளிதில் விபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
இக் கருவிகள் முதல் கட்டமாக தேனிக்கு 36, சின்னமனுாருக்கு 31, பெரியகுளத்திற்கு 33 என 100 ஓல்டேஜ் டிடெக்டர் கருவிகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. விரைவில் 1100 களப்பணியாளர்களுக்கு வழங்கப்படும். மின் ஓயருக்கு அருகில் இக்கருவி கொண்டு செல்லும் போது மின்காந்த அலைகள் மூலம், கருவியில் உள்ள சென்சார் உள்வாங்கி, மின்சாரம் செல்வதை உறுதிப்படுத்தி 'பீப்' ஒலி எழுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்வில் செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.