/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
/
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
ADDED : மே 11, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ராஜக்காள்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் மகன் சுபாஷ் 24, ஐ.டி.ஐ., படித்து முடித்துவிட்டு ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரிடம் எலக்ட்ரீசியன் உதவியாளராக பணியாற்றினார்.
நேற்று ஆண்டிபட்டி தங்கப்பிள்ளை நகரில் உள்ள ஒருவரின் வீட்டில் மின் இணைப்பு வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சுபாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆண்டிபட்டி எஸ்.ஐ., விஜய் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.