/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்களை பாதுகாக்க வலியுறுத்தல்
/
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்களை பாதுகாக்க வலியுறுத்தல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்களை பாதுகாக்க வலியுறுத்தல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்களை பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 13, 2024 12:30 AM
தேனி : மாவட்டத்தில் ஆக.,22 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தோட்டக்கலைத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா கூறுகையில், 'மாவட்டத்தில் நாளை வரை கன மழையும், ஆக.,22 வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 30- 40 கி.மீ., வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் காய்க்கும் தருவாயில் உள்ள வாழைமரங்கள், பப்பாளி, கொய்யா, முருங்கை மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க கம்புகளால் முட்டு கொடுக்க வேண்டும். அதே போல் திராட்சை உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் சேதமடையாமல் முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும். தெளிப்பான்கள் மூலம் உரம், பூச்சி மருந்துகளை ஆக.,22 வரை தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
பண்ணை குட்டைகள், வரப்புகள் மழைநீர் நின்று சேதமடையாதவாறு தயார் படுத்தி வைக்க வேண்டும். கால்நடைகளை மரங்கள், மின்கம்பங்களில் கட்டிவைப்பதை தவிர்க்க வேண்டும். என்றனர்.