/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிராமங்களுக்கு புதிய டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்
/
கிராமங்களுக்கு புதிய டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : மே 26, 2024 04:33 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கலெக்சன் அதிகம் உள்ள கிராமங்களில் பழைய டவுன் பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண்டிபட்டியை மையமாக வைத்து 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தேனி டெப்போவில் இருந்து 20 டவுன் பஸ்கள், பெரியகுளம் டெப்போவில் இருந்து 20, உசிலம்பட்டி டெப்போ மூலம் 4, வத்தலகுண்டு டெப்போ மூலம் 3, போடி டெப்போ மூலம் 2 டவுன் பஸ்கள் ஆண்டிபட்டியில் இருந்து இயக்கப்படுகின்றன. இவற்றில் வத்தலகுண்டு, பெரியகுளம் டெப்போ மூலம் தலா ஒரு புதிய டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி - வத்தலகுண்டு, ஆண்டிபட்டி - பெரியகுளம், ஆண்டிபட்டி, - தேனி, ஆண்டிபட்டி - பாலக்கோம்பை வழித்தடத்தில் டவுன் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதால் பஸ்களுக்கான வருவாய் கூடுதலாக கிடைக்கும். இப்பகுதிகளில் பழுதடைந்த ஓட்டை உடைசலான டவுன் பஸ்களை மாற்றி புதிய டவுன் பஸ்கள் விடுவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஇப்பகுதி மக்கள்வலியுறுத்துகின்றனர்.