sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாணவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்டு நச்சரித்த பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

மாணவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்டு நச்சரித்த பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாணவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்டு நச்சரித்த பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாணவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்டு நச்சரித்த பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 01, 2024 05:35 AM

Google News

ADDED : ஆக 01, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி ஊரணியில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட மருத்துவமனை பணியாளர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் தெரிவித்தார்.

வடுகபட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சவுந்திரபாண்டியன் 13. தென்றல் 11. இவர்கள் மேலகாமக்காபட்டி ரோட்டில் கட்டையன் ஊருணியில் குளித்தபோது நீரில் மூழ்கி ஜூலை 29ல் பலியாகினர்.

இவர்களது உடல் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஜூலை 30) உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உடலை கட்டும் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவமனை உதவி பணியாளர்கள் இருவர், இறந்த மாணவர்களின் உறவினர்களிடம் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு அடம் பிடித்துள்ளனர். உறவினர்கள் பணம் தர மறுத்தனர். பணம் தராததால் உடலை பெற தாமதமாகும் என கூறி பணியாளர்கள் வீம்பு செய்தனர்.

இதன்பின் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே குழந்தைகளை பறிக்கொடுத்து வேதனையடைந்தவர்களிடம் பணம் கேட்டு நஞ்சரித்தது அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது. பணியாளர்கள் குறித்து மருத்துவமனையில் புகார் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் கூறுகையில,' பிரேத பரிசோதனையின் போது பணம் கேட்டவர்கள் குறித்து புகார் வந்துள்ளது. விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'என்றார்.






      Dinamalar
      Follow us