/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேரூராட்சி முன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
பேரூராட்சி முன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பேரூராட்சி முன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பேரூராட்சி முன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 03, 2024 05:15 AM
கம்பம்: காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மஸ்தூர் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிக்கென தற்காலிக மஸ்தூர் பணியாளர்கள் 12 பேர் பணியாற்றினர். ஆண்டிற்கு ஒரு முறை மூலம் பணியாளர் நியமனம் செய்யப்படுவார்கள். 2024-2025 ம் ஆண்டிற்கு வேறு குழுவிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏற்கெனவே பணியாற்றிய பெண் மஸ்தூர்கள் தங்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி நேற்று காலை பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் வரவில்லை. ராயப்பன்பட்டி போலீசார் பணியாளர்களிடம் பேசி தீர்வு ஏற்பட வில்லை. காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் முன்னின்று நடத்தி வருகிறது.