ADDED : மே 24, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் மொகம்மத் ஷாஜகான் 52. புகாரில் அடிப்படையில் தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுந்தர்ராஜன் தலைமையில் 2023ல் செப்., 12ல் சோதனை செய்தனர்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நேற்று பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவு பொறியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கட்டடத்தின் மதிப்பு குறித்து மதிப்பிட்டு விபரங்களை சேகரித்து சென்றனர்.

