ADDED : மே 16, 2024 06:15 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. விழாவில் கல்விக்குழும தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியியல் கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர், முன்னாள் மாணவர் சௌந்தரராஜா, நடிகர்
கே.பி.ஒய்., பாலா, நகைச்சுவை நடிகர் விக்கிசிவா ஆகியோர் பங்கேற்றனர். மனித வாழ்விற்கு நகைச்சுவையின் அவசியம், பிறருக்கு உதவும் குணம் ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவும், பெற்றோரை பேணிக்காப்பதின் அவசியம் குறித்தும், மாணவர்கள் மேம்பாட்டிற்கு தேவையான நற்பண்புகள், ஒழுக்கம், கல்வி ஆகியவை அவசியம் என்றும் பேசினர்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார்.
விழா ஏற்பாடுகளை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ் துறைத் தலைவர் முனைவர் பவுன்ராஜ், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் ராகுல்குமார்செய்திருந்தனர்.