/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தனியார் பஸ் ஊழியர்கள் ஓட்டளிக்க கணக்கெடுப்பு
/
தனியார் பஸ் ஊழியர்கள் ஓட்டளிக்க கணக்கெடுப்பு
ADDED : மார் 28, 2024 06:42 AM
தேனி: லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக தனியார் பஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை கணக்கெடுக்கும் பணியும் துவங்கி உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், '' தனியார் பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் பெரும்பாலனோர் தேர்தலில் ஓட்டளிப்பதில் சிக்கலை சந்திக்கின்றனர். அரசு பஸ்களில் பணிபுரிவோருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படுகிறது. இந்த தேர்தலில் அவர்களும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ஆர்.டி.ஓ., மூலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவனங்கள், அதில் டிரைவர், கண்டக்டர்கள் பற்றிய விவரங்கள் தேர்தல் பிரிவு அதிகாரிகளால் கேட்கப்பட்டுள்ளது. இவர்களும் தேர்தலில் ஓட்டளிப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசிக்க உள்ளனர்.

